Sunday, June 19, 2016

நடு வீதி நம் விதி


விதி செய்த சதி
வந்தோம் நடு வீதி
வரவேற்றது புழுதி
வந்து சேர்ந்தது வியாதி
வறுமை எங்கள் அகராதி
வலுச்சேர்த்தது என் சாதி
கழுத்தை அடைத்தது கடன்
துரத்தி விட்டது பிள்ளையுடன்
உரத்துக்கேட்கிறது பசியின் குரல்
உயிர் வரை உலுப்புது சாவின் நிழல்
வறுமைக்கோட்டில் மட்டுமே நடந்தோம்
உரிமை கேட்டதால் உதைபட்டு வீழ்ந்தோம்
பெருமையோடு எம்மை சேர்த்தது வீதி
பிறந்த நாட்டிலும் எமக்கு இதுதானா நீதி
புரட்சிகள் எல்லாம் வீதியில் இறங்கியும்
வறட்சி மட்டுமே எங்கள் வாழ்வாகி போனது.
இணையத்தில் பகிராமல் இதயத்தில் பகிருங்கள் -நாளை
நடுவீதி வேண்டாம் எனும் நல்நீதி வேண்டும்.  
       நன்றி.

     ஆர்.ஜே.பிரகலாதன்.
       2016.06.06.