Saturday, February 13, 2016

காட்சியும் அதன் நீட்சியாய் கவிதையும்.

காதல் வைரஸ்

"காதல் வைரஸ்"
ஒரு முறை இந்நோய் இருவரைத்தாக்கும்
உருவாக முன்பே உயிர்வரை பூக்கும்
விடுமுறை இன்றியே வேதனை கூட்டும்
வெறும் வயிறதையும் பசியின்றி காட்டும்.
குணங்குறி காட்டும் உணர்வதை தாக்கும்
அணங்கெதிர்ப்பட்டால் அங்கேயே நிற்கும்
தினமதன் தீவிரம் கூடியே காட்டும்
மனமதன் ஈரமும் மறையவே வாட்டும்.
கண்ணால் பரவும் கதை பேச்சு சுருக்கும்
இதயம் வரைக்கும் இதன் தாக்கம் இருக்கும்
காத்திருக்கையிலே கால் மிக வலிக்கும்
பார்த்திருக்கையிலே பார்வையும் பறிக்கும்.
சித்த மருத்துவமும் செயலிழக்கும்
முத்த மருத்துவம் குணப்படுத்தும்
காதல் வென்றிட முடியா வியாதியடா
காலம் சொல்லிட முடியா ஆதியடா.
                                                  - R.J.பிரகலாதன்.